Wednesday, August 18, 2010

ஓர் ஒப்பற்ற ஆன்மிகப்பணி

‘கீதா ப்ரெஸ்’ நிறுவனம் 1923 ம் ஆண்டு ஸ்ரீ ஜயதயாள் கோயந்தகா அவர்களால் கோரக்பூரில் கீதையை ப்ரசாரம் செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது. இன்றுவரை ராமாயணம், கீதை போன்ற அறநூல்களை 37 கோடிப் படிகளுக்கு மேல் குறைந்த விலையில் விநியோகம் செய்துள்ளது. இந்திய மொழிகள் தவிர, ஆங்கிலம், நேபாளம் ஆகிய மொழிகளிலும் இந்நிறுவனம் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது.

ரிஷிகேசில் நிறுவப்பட்டுள்ள ‘கோவிந்த பவநம்’ 1,000 அறைகள் கொண்டது. கோடைகாலத்தில் மக்கள் இங்கு கூடி ஸத்ஸங்கத்தில் ஈடுபடுவர். பாடசாலைகளையும், ஆயுர்வேத மருந்தகங் களையும் இந்நிறுவனம் மக்களின் நன்மைக்காக நடத்தி வருகிறது.

தமிழில் 80க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் வெளியீடுகள் கிடைக்குமிடம் –

கீதா பிரஸ் புத்தக நிலையம்
கீதா பிரஸ் மேன்ஷன்
8/1 – M, ரேஸ் கோர்ஸ் சாலை
கோயம்புத்தூர் – 641 018
தொ பே எண் : 0422 3202521


Website : www.gitapress.org
Mail ID : booksales@gitapress.org

No comments:

Post a Comment